Entertainment
நடிகை சன்னிலியோன் மீது மோசடி புகார்
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை சன்னிலியோன். கவர்ச்சி பிசாசு என இவரை சொல்லலாம். தனது அதிரடி கவர்ச்சியால் பல ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் என இவரை சொல்லலாம்.
இவர் மீது 29 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக எழுந்த புகார் எழுந்துள்ளது. சன்னி லியோனிடம் கொச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கொச்சி உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்பை நடத்தி வரும் ஆர்.ஷியாஸ் என்பவர், அம்மாநில டி.ஜி.பி.யிடம் சன்னி லியோன் மீது புகார் அளித்துள்ளார்.
சன்னி லியோனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஷியாசிடம் மேலும் தகவல்களை பெற்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நிகழ்ச்சிகளில் பங்கேற்க தேதி கொடுத்து, அதற்கான பணம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதனை முறையாக பயன்படுத்தவில்லை என சன்னி லியோன் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
