Entertainment
சுந்தர் சியின் பல படங்களில் நடித்த நடிகர் விச்சு சுந்தர் சிக்கு வாழ்த்து
சுந்தர் சி இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படம் ஆரம்பித்து மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, கலகலப்பு, கலகலப்பு 2 , அரண்மனை என அவரின் எல்லா படங்களிலும் நடித்தவர்தான் நடிகர் விச்சு.
சுந்தர் சியின் நெருங்கிய நண்பரான இவர் சுந்தர் சியின் பல படங்களில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நேற்று சுந்தர் சியின் பிறந்த நாளை ஒட்டி தனது நண்பர் சுந்தர் சிக்கு வாழ்த்து ஒன்று தெரிவித்துள்ளார்.
தாய் கடவுள் தந்த வரம், மனைவி கடவுளாய் வந்த வரம் ஆனா நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம் என்று சொல்லுவார்கள்., அப்படி பொக்கிஷமாய் எனக்கு கிடைத்த நண்பன் இயக்குனர் திரு சுந்தர்சி அவர்களுக்கு இன்று பிறந்த நாள். பலபேரை வாழவைக்கும் அவர் பல்லாண்டு வாழ மனமார வாழ்த்துகிறேன் என விச்சு தெரிவித்துள்ளார்.
