Entertainment
சனி ஞாயிறுகளில் ஏற்காடு சுற்றுலா தலம் செல்ல தடை
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமம் தான் ஏற்காடு. ஏழைகளின் ஊட்டி என்றோ கொடைக்கானல் என்றோ கூட இந்த ஊரை சொல்லலாம். அவ்வளவு அழகான மலைப்பாங்கான ஊர்.
காபி தோட்டங்கள் இங்கு உண்டு, சேர்வராயன் மலை , சேர்வராயன் கோவில் , படகு குழாம் என இங்கு எண்ணற்ற இடங்கள் உண்டு.
இங்கு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். தற்போது கொரோனா பரவலை காரணம் காட்டி சனி, ஞாயிறு மட்டும் ஏற்காடு செல்ல சேலம் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.