biggboss

வெற்றிப் போட்டியாளர் இவர்தான் – பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் கணிப்பு

நடைபெற்று வரும் பிக்பாஸ் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என நடிகை சுஜா வருணியின் கணவர் கணித்து கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டியாளரை தேர்வு செய்யும் நோக்கத்தில் பிக்பாஸ் பல கடினமான டாஸ்க்குக்களை கொடுத்து வருகிறார். எனவே யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் தொடக்கம் முதலே தர்ஷன வெற்றிபெறுவார் என்று பலரும் கூறி வருகின்றனர். பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரே அவர் பெயரை கூறி வருகின்றனர். சிலர் சேரன், லாஸ்லியா, கவின் உள்ளிட்டோரை கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டவரும், நடிகையுமான சுஜா வருணியின் கணவர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் முகேனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கருப்பு குதிரையான முகேன் அமைதியாக கோப்பையை வெல்வார் என எனக்கு தோன்றுகிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், வசீகரமாகவும் இருக்கிறார். ஏற்கனவே எனக்கு மலேசியா பிடிக்கும்.

இப்போது மலேசியாவை அதிகம் பிடிக்கும்படி செய்து விட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.