விழா ஒன்றில் பங்கேற்ற சுஹாசினியிடம் ஹிந்தி மொழி குறித்து கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து கருத்து கூறிய சுஹாசினி, ஹிந்தி நல்ல மொழிதான் படிங்க, ஹிந்தி படிக்கறவங்க எல்லாமே நல்லவங்கதான் என சொன்னார்.
இதனால் சிலர் அப்போ தமிழ் படிக்கறவங்க எல்லாம் மோசமானவங்களா என சுஹாசினியின் கருத்துக்கு மாற்று கருத்து தெரிவிக்கிறேன் என அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து கூறியுள்ள அமீர் ஹிந்தி மொழி பேசுறவங்கதான் நல்லவங்களா? அப்போ மலையாளம், கன்னடம், தமிழ் பேசுறவங்க எல்லாம் நல்லவர்கள் இல்லையா, ஆரியம் ரொம்ப ஆபத்தானது, இது போல விசயங்களை எல்லாம் அதுதான் திணிக்கிறது எனவும் அமீர் கூறியுள்ளார்.