Connect with us

பத்திரிக்கையாளரும் நடிகருமான சுதாங்கன் காலமானார்

cinema news

பத்திரிக்கையாளரும் நடிகருமான சுதாங்கன் காலமானார்

பத்திரிக்கையாளர் சுதாங்கன் நீண்ட வருடங்கள் தமிழில் ஊடகவியலாளராக பணியாற்றியவர்.நீண்ட காலம் தினமணி நாளிதழின் எடிட்டராக இருந்தவர்.

 

ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் நேர்காணல் உள்ளிட்டவற்றை நடத்தி இருக்கிறார்.

சிறந்த பத்திரிக்கையாளரான இவர் நல்ல கட்டுரைகளை சிந்தனைகளையும் எழுதியுள்ளார்.

இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.

மணிவண்ணன் இயக்கி சரத்குமார் நடித்த மூன்றாவது கண் என்ற திரைப்படத்தில் போட்டோ ஸ்டுடியோ ஓனராக இவர் நடித்திருப்பார். அதுவும் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டராக இயக்குனர் மணிவண்ணன் இவருக்கு கொடுத்திருப்பார்.

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

இவரின் மறைவுக்கு மனோபாலா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 

More in cinema news

To Top