cinema news
ஒரு படம் என்றாலும் சத்யராஜ் போல வில்லத்தனத்தில் மிரட்டிய சுதாங்கன்
நேற்று காலமானவர் பத்திரிக்கையாளர் சுதாங்கன். தினமணி பத்திரிக்கையின் எடிட்டராகவும், தமிழன் எக்ஸ்பிரஸ், மற்றும் ஜெயா டிவியிலும் இவர் பணிபுரிந்தார்.
இவர் மணிவண்னன் இயக்கிய மூன்றாவது கண் என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். இப்படம் ஒரு பரபர த்ரில்லர் படம். மனைவியை கொலை செய்த நிழல்கள் ரவியை கொலை செய்யும் நிழல்கள் ரவியை எதிர்வீட்டு ஜன்னலில் இருந்து படம் பிடிக்கும் மோனிஷா அதை தன் வீட்டு வேலைக்காரி பசி சத்யாவிடம் கொடுத்து ஃபோட்டோ ஸ்டுடியோவில் பிரிண்ட் கொடுக்க சொல்ல பசி சத்யாவை தொடர்ந்து சென்று அவர் பிரிண்ட் போட சொன்ன போட்டோ ஸ்டுடியோ ஓனரை நிழல்கள் ரவி மிரட்டுவதாக காட்சி.
போட்டோ ஸ்டுடியோ ஓனராக சுதாங்கன் நடித்திருப்பார். தன்னை மிரட்டும் நிழல்கள் ரவியை சுதாங்கன் மிரட்டுவார். இதில் அந்தக்கால வில்லத்தன சத்யராஜின் பாடி லாங்வேஜை கொஞ்சம் முயற்சி செய்திருப்பார். மிகவும் சாதாரணமாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு கொலை செய்த நிழல்கள் ரவியிடம் பணம் கேட்டு மிரட்டும் காட்சியில் நம்மை மிரட்டி இருப்பார்.
மணிவண்ணன் இயக்கிய 24 மணி நேரம் உள்ளிட்ட படங்களில் சத்யராஜின் வில்லத்தனம் சுதாங்கன் நடித்த காட்சி போலத்தான் இருக்கும்.
இரு படங்களையும் இயக்கியது மணிவண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்றாவது கண் படத்தில் சிறிது நேரம் மட்டுமே வரும் சுதாங்கனின் ஃபோர்ஷன் மிக அருமையாகவே இருக்கும்.