Entertainment
சசி அண்ணன் கூப்பிடுவார்னு பார்க்குறேன் கூப்பிடல- சுப்பிரமணியபுரம் நடிகர் வேதனை
சுப்பிரமணியபுரம் படத்தில் டும்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் மாரி. இவரை சமீபத்தில் ஒரு தனியார் யூ டியூப் சேனலில் பேட்டி அளித்துள்ளார்.
சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் பெரிய அளவில் பல படங்களில் நடித்து இருந்த போதிலும் இவர் மட்டும் சொல்லிகொள்ளும்படி படங்களில் நடிக்காதது ஆச்சரியம்தான்.
அதற்கு காரணம் என இவரே சொன்னது என்னவென்றால்,
மதுரையில் ஊர் சுற்றிக்கொண்டிருந்த இவரை சுப்பிரமணியபுரம் படத்தின் டும்கா கதாபாத்திரத்துக்கு சசிக்குமார் தேர்வு செய்தது முதல் நன்றாக கவனித்துள்ளார். படம் வந்த பிறகும் ஒரு முறை சசிக்குமாரின் ஆபிஸ் சென்று ஒரு ஓரமாக படுத்து தூங்கிய இவரை அழைத்து சென்னை வடபழனியில் நல்ல ரூம் போட்டு கொடுத்து இதில் தூங்கு என நன்றாகவே சசி கவனித்துள்ளார்.
கொஞ்சம் சேட்டை பிடித்த இவர் சுப்பிரமணியபுரம் நூறாவது நாள் விழாவில் நன்றாக மது அருந்தி விட்டு எல்லோர் காலிலும் விழுந்து கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொண்டது சசிக்குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விட்டதாம்.
அதில் இருந்து சசிக்குமார் இவரை அழைப்பதில்லையாம். சசிக்குமார்தான் தனக்கு வாழ்வு கொடுத்தவர் என அவரது பெயரை பச்சை குத்தியுள்ள அவர் என்றாவது சசி அண்ணன் திரும்ப ஏதாவது ஒரு படத்துக்கு அழைப்பார் என காத்திருக்கிறார்.
