cinema news
சுப்ரமணியபுரத்துக்கு வயது 13
சசிக்குமார் இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி வெளியான படம் சுப்ரமணியபுரம். இப்படம் 80களின் வாழ்க்கை சூழலை பிரதிபலித்தது. இதனால் இப்படம் பெரும் புகழ்பெற்றது.
கோல்டன் டேஸ் என்று 80களின் வாழ்க்கை முறையை கூறலாம் அத்தகைய 80களின் வாழ்க்கை முறையை இப்படம் விளக்கி கூறியது.
80களில் பெரும் ஹிட் ஆன சில பாடல்கள் படத்தின் சூழலுக்காக மீண்டும் இப்படத்தில் சேர்க்கப்பட்டது அதில் ஒரு பாடல்தான் சிறு பொன்மணி அசையும் பாடல். ஜேம்ஸ் வசந்தன் இசையில் கண்கள் இரண்டால் என்ற பாடலும் பெரிய வெற்றி பெற்றது.
சசிக்குமார், ஸ்வாதி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நெருங்குவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.