Pallikalvi News
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – தொடங்கியது போராட்டம்
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஏற்கனவே 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 5 மற்றும் 8 வது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வித்துறை இயக்குனர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தும் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.