Latest News
மாணவர் மணிகண்டன் உடலை மறு கூராய்வு செய்ய உத்தரவு
முதுகுளத்தூர் அருகே ஹெல்மெட் போடாமல் சென்ற மணிகண்டன் என்ற மாணவன், போலீசார் தடுத்தும் நில்லாமல் சென்றார் இதனால் போலீசார் அந்த மாணவர் இருக்கும் இடம் தெரிந்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரித்துவிட்டு விட்டு விட்டதாக போலீசார் தரப்பிலும் மாவட்ட எஸ்.பி தரப்பிலும் சொல்லப்படுகிறது. ஆனால் மணிகண்டன் வீட்டுக்கு வந்த உடனே காலையில் இறந்து விட்டார் இதனால் போலீஸ் அடித்து கொன்று விட்டதாக பொதுமக்களால் சொல்லப்படுகிறது அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவரது உடல் மருத்துவமனையிலேயே குளிர்பதன பெட்டியில் வைத்து பராமரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மாணவனின் உடலை மறு கூராய்வு செய்ய வேண்டும் என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.