Entertainment
பஞ்சர் கடையில் வேலை பார்த்த மாணவியை நர்சிங் கல்லூரியில் சேர்த்து விட்ட சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமா நடிகர்களில் பலர் தெரிந்தும் தெரியாமலும் பலருக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு மாணவியை நர்சிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.
மாணவி தேவசங்கரி என்பவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு தான் விரும்பிய நர்சிங் படிப்பை படிக்க முடியாமல் தனது தந்தை நடத்தி வந்த பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இது தொடர்பான செய்திகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் அந்த மாணவியை தொடர்பு கொண்டு பேசி அந்த மாணவியை நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்க முயற்சி எடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் அந்த மாணவி சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மாணவி தேவசங்கரி சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
