தெரு நாய்கள் மீது அன்பு செலுத்தும் பிரபல நடிகர்

தெரு நாய்கள் மீது அன்பு செலுத்தும் பிரபல நடிகர்

நாட்டாமை படத்தில் தாத்தா நான் பார்த்தேன் என முக்கியமான பஞ்சாயத்து காட்சியில் வந்து சாட்சி சொல்பவர் மாஸ்டர் மகேந்திரன். இந்த படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

தொடர்ந்து நேபாளி சிறுவனாக தாய்க்குலமே தாய்க்குலமே உள்ளிட்ட படங்களில் கலகலப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

பின்பு பாண்டியராஜனுடன் கும்பகோணம் கோபாலு படத்தில் நடித்தார். இப்படி பல்வேறு படங்களில் நடித்த மகேந்திரனை மாஸ்டர் மகேந்திரன் என சொன்னால்தான் இன்னும் தமிழ் மக்களுக்கு தெரியும்.

மகேந்திரன் வாலிபராகி பல படங்களில் நடித்து விட்டாலும் இன்னும் குழந்தைதனத்துடன் அன்பாக தெருநாய்களுக்கு பிஸ்கட் அளித்து வருகிறார். பிராணிகள் மீது அன்பு செலுத்துங்கள் என அவர் தன் டுவிட்டர் பாலோயர்ஸ்களிடம் கேட்டுள்ளார்.