Latest News
ஸ்டெர்லைட் ஆலை திறக்க முயற்சிப்பு- திருமாவளவன் கண்டிப்பு
கடந்த 2019ல் தூத்துக்குடியில் ஏற்பட்ட பெருங்கலவரத்தில் காலவரையின்றி மூடப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை. இந்த கலவரத்தின் போது துப்பாக்கி சூடி நடந்ததும் துப்பாக்கி சூட்டால் 13 பேர் உயிரிழந்ததும் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என மத்திய அரசி முயன்று வருகிறது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் கிடைக்கவில்லை என ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காதே, ஆயிரம் பேர் செத்தாலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோமென கட்டியம் கூறும் உழைக்கும் மக்களின் போர்க்குரல் ஆளுவோரின் செவிப்பறையை கிழிக்கட்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
