இந்தியாவில் கொரொனா காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் முதல் நான்கு கட்டமாக அமலில் இருந்து. தற்போது 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசின் வழிமுறைகளுக்கு உட்பட்டு அந்த அந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, கொரொனா தாக்கம் அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் 50% அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு இருந்த்து. இந்நிலையில், தமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள், கல்லாகட்டியதா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.
ஆதாவது, தமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடங்கினாலும், பயணிகள் வரத்து குறைவு என்றும், சாதாரணமாக சுமார் 12 லட்சம் முதல் 13 லட்சம் பேர் பயணிக்கும் பேருந்துகளில் நேற்று 1,58,000 பேர் மட்டுமே பயணித்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் அரசுக்கு நல்ல வசூலாகும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாலும், பெரும்பலானோர் வீட்டிலே இருந்து பணி புரியும் சூழ்நிலையில் உள்ளதாலும் கல்லாகட்டவில்லை என்று மட்டுமே யுகிக்கமுடியும்.