தமிழக அரசியலில் வெற்றிடமா? – ரஜினிக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

245
தமிழக அரசியலில் வெற்றிடமா

நான் இருக்கும் வரை தமிழக அரசியலில் வெற்றிடம் என்கிற வார்த்தைக்கே இடமில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியா டுடே நாளிதழுக்கு பேட்டி கொடுத்த ரஜினி ‘சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் அனைவருக்கும் எம்.ஜி. ஆர் தான் ரோல் மாடல்.  எனக்கும் அவர்தான் ரோல் மாடல். தமிழ்நாட்டில் தற்போது நல்ல தலைமை இல்லை. தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் நிலவுகிறது’ எனக் கூறியிருந்தார். இந்நிலையில், கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழாவில் பேசிய ஸ்டாலின் ‘ நான் கனவு காண்பதாக என்னை கிண்டல் செய்தனர். ஆனால், மக்கள் அவர்கள் கற்பனையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டனர். தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக இன்னும் சிலர் கூறி வருகின்றனர். அதில் உண்மையில்லை. கருணாநிதியின் மகன் நான் இருக்கிறேன்’ என அவர் பதிலடி கொடுத்தார்.

பாருங்க:  தர்பார் படத்தில் ரஜினியின் வேடம் இதுதான் - கசிந்த தகவல்