ஸ்டாலின் பதவியேற்பு குறித்து வேண்டுகோள்

51

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல்வராக பதவி ஏற்கிறார். தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் பெரும் பிரச்சினைகள் நிலவுவதால் ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை.

உடன்பிறப்புகளின் அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சரானாலும், உங்கள் முன்னிலையில் பதவி ஏற்க முடியவில்லையே என்ற கவலை உள்ளது. உடன்பிறப்புகளின் நலனே முக்கியம்! எளிய விழாவினை வீடுகளில் இருந்தே கண்டுகளியுங்கள்; உடல் அங்கே என்றாலும் உங்கள் உள்ளம் சென்னையில்தான் என்பதை அறிவேன். இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் கூறி உள்ளார்.

பாருங்க:  ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து
Previous articleபிஜேபி எம்.பியை தாக்க முயன்ற மம்தா ஆதரவாளர்கள்
Next articleமுதல்வராக பதவி ஏற்ற ஸ்டாலின் – கண் கலங்கிய மனைவி துர்கா