Entertainment
ஸ்டாலினுக்கு பவன் கல்யாண் பாராட்டு
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண். இவர் ஜனசேனா கட்சி என்ற கட்சியை ஆந்திராவில் நடத்தி வருகிறார். ஆந்திராவின் முன்னணி நடிகராகவும் உள்ளார்.
இவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அன்புக்குரிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்
எந்த ஒரு கட்சி என்றாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஒரு கட்சி அரசியலுக்கு வந்த பின் அரசியல் செய்ய கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்.
உங்கள் ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள் உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது.
உங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பவன் கல்யாண் கூறியுள்ளார்.
