ஸ்டாலின் வெற்றிக்காக நாக்கை அறுத்தபெண்- கண்டித்த ஸ்டாலின்

12

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து கோவில் உண்டியலில் போடுகிறேன் என வேண்டிக்கொண்ட இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள பொதுவக்குடியை சேர்ந்த பெண், பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் நேற்று காலை நாக்கை அறுத்து எறிந்தார். கோவில்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வாசலில் எறிந்தார். உடனடியாக மயங்கி விழுந்த அந்த பெண் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிக்காக ஒரு போதும் இப்படி செய்யக்கூடாது, திமுக தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதையே காணிக்கையாக செய்ய வேண்டும், அந்த பெண் விரைவில் குணமடைய வேண்டுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாருங்க:  தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு – திமுக தலைவர் ஸ்டாலின் சர்ச்சை டிவிட் !
Previous articleஅம்மா உணவகம் தாக்குதல் – நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்
Next articleரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார்