Latest News
ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்து
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வரானதையொட்டியும் இன்று அன்னையர் தினம் என்பதாலும் தன் தாய் தயாளு அம்மையாரை இன்று சந்தித்தார். அன்னையர் தினம் தொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்ட வாழ்த்து செய்தி பின்வருமாறு.
தாய்’மொழி, ‘தாய்’நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு! எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்! மகளிர் நலத்துடன் – அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்!
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
