ஸ்டாலின் பாட்டுக்கு இசையமைத்தவருக்கு திருமணம்

26

தேர்தலுக்கு முன்பு பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்த பாடல் ஸ்டாலின் தான் வர்றாரு, இந்த பாடல் மிகுந்த பரபரப்பை அந்த நேரங்களில் ஏற்படுத்தியது தேர்தலுக்காக இப்பாடல் தயாரிக்கப்பட்டது. ஒரு பக்கம் இந்த பாடலை பலர் வாழ்த்தி கொண்டிருந்தாலும் மீம்ஸ் கிரியேட்டர்களும் இந்த பாடலை வைத்து திமுகவுக்கு எதிராக பலர் ட்ரோல் செய்து கொண்டிருந்தனர்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானும் கூட இந்த பாடலை வைத்து கேலி செய்தது நியாபகம் இருக்கலாம். எப்படியோ பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துக்களால் இந்த பாடல் ஹிட் ஆகிவிட்டது.

இந்த பாடலுக்கு இசையமைத்தவர் ஜெரார்ட் ஃபெலிக்ஸ் என்ற இளவயது வாலிபர். இவரின் திருமணம் நேற்று நடந்தது இதில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

பாருங்க:  இசைப்புயலின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்
Previous articleஉடல்நிலை குறித்து பரவிய வதந்தி- பாத்திமா பாபுவின் விளக்கம்
Next articleஜி.எம் குமாரின் அதிரடி கருத்து