ஸ்டாலினின் மிக மோசமான தீபாவளி வாழ்த்து- மக்களின் கோபப்பார்வையில் ஸ்டாலின்

343

உலகமெங்கும் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளிப்பண்டிகை. அதர்மம் அழிந்து தர்மம் தலை தூக்கியதாக சொல்லப்படும் ஐதீகத்தின் அடிப்படையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் எனும் அசுரனை அழித்து கிருஷ்ண பரமாத்மா தர்மத்தை நிலைநாட்டியதாக சொல்லப்படும் அடிப்படையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

கிட்டத்தட்ட மக்கள் அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்க கூடிய ஒரு பண்டிகை என்றால் இதுதான். இதற்காக தங்களது பண கஷ்டத்தையும் தாங்கி கொண்டு புது துணி மணிகள், பட்டாசு இவையெல்லாம் எடுத்து மிக மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் ஒர் திருநாள் தீபாவளி.

இவ்வளவு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு பண்டிகைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கும் வாழ்த்துகளை பாருங்கள்.

விடுமுறை தின நல்வாழ்த்துக்கள் என்று ஸ்டாலின் தீபாவளிக்கு கொடுத்திருக்கும் வாழ்த்து அறிக்கையை உண்மையில் மக்கள் பார்த்து பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள்.

அனைவரும் மங்களகரமாக கொண்டாடும் ஒரு பண்டிகைக்கு இது போல வாழ்த்து சொல்லி இருப்பதால் வரும் தேர்தலில் ஸ்டாலின் ஓட்டு கேட்டு வரும்போது இதை நேரடியாக கேட்போம் என சமூக வலைதளத்தில் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

பாருங்க:  ராதே ஸ்யாமில் பிரபாசுடன் இணையும் ஜெயராம்
Previous articleதமன்னாவுக்கு வந்து போன கொரோனா- பயத்தின் உச்சத்துக்கு போன தமன்னா
Next articleகணிக்க முடியாத குணம் கொண்டவர் ராகுல்- ஓபாமா