தேர்தல் நெருங்குகிறது அதனால் தலைவர்கள் மக்களிடம் நெருங்கி வருகின்றனர். பல இடங்களில் இயல்பாக மக்களிடம் சென்று பேசி வருகின்றனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் தான் ஊர் ஊராக சென்று கிராம சபை கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாட்டு பொங்கல் தினமாதலால் பல இடங்களில் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்ற ஸ்டாலின் மாட்டு வண்டிய புகைப்படம் இணைய தளங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.