அமெரிக்க துணை அதிபருக்கு தமிழில் கடிதம் எழுதிய ஸ்டாலின்

அமெரிக்க துணை அதிபருக்கு தமிழில் கடிதம் எழுதிய ஸ்டாலின்

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஜோபிடன். இவரது கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர்தான் துணை அதிபராக இருக்கிறார். கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டில் மன்னார்குடியை பூர்விகமாக கொண்ட துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ஒரு வாழ்த்து மடல் அனுப்பி இருக்கிறார்.

அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் கமலா ஹாரிஸ்தமிழ்நாட்டின் மன்னார்குடி – துளசேந்திரபுரத்தை தாய்வழி பூர்வீகமாகக் கொண்டவர்!

கமலா ஹாரிஸ்
அவர்களின் தமிழகத் தொடர்பினை நினைவூட்டும் வகையில் நம் தாய்மொழியாம் தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பியிருக்கிறேன்! என ஸ்டாலின் கூறியுள்ளார்.