ஸ்டாலின் செய்தது நீதிமன்ற அவமதிப்பு- முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை

ஸ்டாலின் செய்தது நீதிமன்ற அவமதிப்பு- முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை

நீட் தேர்வு பயம் காரணமாக நேற்று மட்டும் தமிழ் நாட்டில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மதுரை மாணவி, நாமக்கல் மாணவர், திருச்செங்கோடு மாணவர்  என நீட் மரணங்கள் நீள்கிறது.

 

சமீபத்தில் அரியலூர் மாணவர் ஒருவர் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டார் .

இந்த நிலையில் இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழ்நாடு பாரதிய ஜனதா துணைத்தலைவருமான அண்ணாமலை,தமிழகத்தில் நீட் தேர்வு 8 மாதத்தில் ரத்தாகும் என ஸ்டாலின் கூறுவது தவறான தகவல் .

நீட் தேர்வு என்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்பதால் இது நீதிமன்ற அவமதிப்பாகும் என அண்ணாமலை ஐபிஎஸ் கூறியுள்ளார்