Connect with us

Latest News

ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட எஸ்.ஐ உடல் அடக்கம்

திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு எஸ்.எஸ் ஐயாக இருந்தவர் பூமிநாதன். இவர் நேற்று ஆடு திருடர்களை பிடிக்க சென்றபோது ஆடு திருடர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இன்று தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி முதல் முதலமைச்சர் ஸ்டாலின் வரை இப்பிரச்சினைக்கு தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய இரண்டு டி.எஸ்.பிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை எஸ்.எஸ் ஐ பூமிநாதனின் உடல் 30 குண்டுகள் முழங்க காவல் துறையின் மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாருங்க:  வீட்டு வேலை செய்ய ரோஃபோ- 1 கோடி வருடம்- மதுரை சுயேட்சை வேட்பாளரின் அதிரடி

Entertainment

மோகன்லால் நடிக்கும் மரைக்காயர் படத்தின் தமிழ் டிரெய்லர்

மோகன்லால் நடிப்பில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக வெளிவர இருக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடல் சிங்கம். பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பாருங்க:  எஸ்.ஐ கொலை வழக்கில் சிறுவர்கள் கைது
Continue Reading

Entertainment

உதயநிதி படத்தில் வடிவேலு

பரியேறும் பெருமாள்,கர்ணன் படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் ஒரு படம் இயக்கி வருகிறார். உதயநிதி நடிக்க இருக்கும் இப்படத்தில் உதயநிதியுடன் வடிவேலுவும் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் தற்போது வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளை நடிகர் வடிவேலு சுமூகமாக தீர்த்துக் கொண்டார்  தற்போது புதிய படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  31 வருடத்தை நெருங்கிய ரஜினியின் மாப்பிள்ளை
Continue Reading

Latest News

ஐபிஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு காவல் ஆணையராக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளரான விஜயகுமார் மாற்றப்பட்டு அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பாருங்க:  ஆடு திருடி மாட்டிக்கொண்ட திருட்டு நடிகர்கள்
Continue Reading

Trending