நாட்டில் என்ன ஒரு சோக சம்பவம் நடந்தாலும் உடனே கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இருந்து ஒரு கவிதை வந்து விடும். தற்போது பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளால் நாட்டில் பெரும் வன்முறை ஏற்பட்டு தற்போது பெரும் அமைதி நிலவி வருகிறது. இலங்கை பிரதமராக இருந்த ராஜபக்சேயின் வீடுகள் எல்லாம் அடித்து துவம்சம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இலங்கை பிரச்சினை குறித்து ஒரு கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதை இதோ.
நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
‘தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே…
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே…
ஓ
சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.