இலங்கையில் வரலாறு காணாத போராட்டம்- இன்று முழு ஊரடங்கு வேலை நிறுத்தம்

இலங்கையில் வரலாறு காணாத போராட்டம்- இன்று முழு ஊரடங்கு வேலை நிறுத்தம்

இலங்கையில் பொருளாதார ரீதியிலான பிரச்சினையால் கடந்த இரு மாதங்களாக அங்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் இல்லாமல் மக்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர்.

எரிபொருட்களில் இருந்து அனைத்தும் விலையேறிவிட்டது. அதிக விலை கொடுத்தாலும் கிடைப்பதில்லை. வெறும் பேப்பரான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு பணத்தை தின்றுதான் வாழ வேண்டும் என மக்களின் நிலை உள்ளது.

ஆனால் மக்கள் எவ்வளவு போராடினாலும் நீ முடிஞ்சத பார் என்கிற அளவுக்குதான் அண்ணன் தம்பிகளான கோத்த பய ராஜபக்‌ஷேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் செயல்பட்டு வருகின்றனர்.

எவ்வளவு கடுமையான போராட்டத்தையும் மக்கள் கிளர்ச்சியையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பதவியில் உள்ளனர். இவர்களை பதவி விலக சொல்லி கோ ஹோம் கோத்தா என்ற ஹேஷ் டேக்கையும் இவர்கள் தினமும் சமூக வலைதளங்களில் உலவ விடுகின்றனர்.

இருப்பினும் ராஜபக்சேக்கள் எதற்கும் அசைவதாய் தெரியவில்லை. இன்று நாடு தழுவிய அளவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு இலங்கையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே இன்று முதல் 1 மாத காலத்துக்கு ஊரடங்கு சட்டத்தையும் இந்த ராஜபக்சேக்கள் அரசு அறிவித்துள்ளது மிக கொடூரமானது.