Published
1 month agoon
ஒருவரை எதிர்த்து ஒரிருவர் போராடினால் பரவாயில்லை . ஆனால் ஒருவரை எதிர்த்து உலகமே போராடுகிறது. ஒரு நாட்டின் மக்களில் 99 சதவீத மக்கள் போராடுகிறார்கள் .
ஆம் இலங்கையில் கடந்த ஜனவரி மாதத்தில் லேசாக ஆரம்பித்த பொருளாதார பிரச்சினைகள் தற்போது வீறு கொண்டு எழுந்து மக்களை சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட வைத்துவிட்டது.
இலங்கையில், சாப்பாடு, பால்மாவு, பெட்ரோல், டீசல், கியாஸ், போன்றவைகளுக்கு அதிக தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த நிலையில் அதிபரை பதவி விலக சொல்லி மக்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
ஆனால் எவ்வளவுதான் ஒட்டுமொத்த மக்கள் கூட்டம் எதிர்த்தாலும் எல்லோரையும் போயிட்டு வாங்க என தூக்கி சாப்பிடும் அளவுக்கு மிக அசால்ட்டாக ஆட்சி கட்டிலில் உட்கார்ந்து கொண்டு பிரதமரான மகிந்த ராஜபக்ஷேவும் குடியரசுத்தலைவர் கோத்தபய ராஜபக்ஷேவும் இறங்க மறுத்து வருகின்றனர்.
இருப்பினும் மக்கள் போராட்டம் அதிகரித்து வந்துகொண்டே இருக்கிறது. ஆனால் பக்ஷே சகோதரர்கள் ஆட்சியில் இருந்து இறங்க மறுக்கின்றனர். இப்போது கூட சற்றுமுன் புதிய அமைச்சரவை இவர்கள் தலைமையில் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.