இலங்கை நாட்டில் மற்ற எந்த நாட்டிலும் இல்லாத துயரமாக 13 மணி நேர மின்வெட்டு நேற்று முதல் அமல்படுத்தப்படுகிறது. மின்சாரத்தட்டுப்பாடு மின்சாரம் வாங்க வசதி இல்லாமை, டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு, கியாஸ் தட்டுப்பாடு போன்றவற்றால் இலங்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் மக்கள் தங்கள் அன்றாட நிகழ்வுகளில் இருந்து இதனால் விலகி இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
பொறுத்து பார்த்த மக்கள் நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவின் மாளிகை நோக்கி சென்று இரவில் கடுமையாக போராடினர்.
மிகுந்த பரபரப்பு அங்கு ஏற்பட்டது. கலவரம் ஏற்படும் சூழல் உருவானது போலீசார் அங்கிருந்த கூட்டத்தை ஒரு வழியாக நீரை பாய்ச்சி கலைத்து விட்டனர்.