Entertainment
இலங்கையில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை
வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக அனுசரித்து பலரும் காதலர் தினம் கொண்டாடி வருகின்றனர். வேலண்டைன்ஸ் என்பவரின் பெயரால் கொண்டாடப்படும் இந்த விழா வேலண்டைன்ஸ் டே என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த விழா கொண்டாடப்படும்போது பாரம்பரியம் அழிகிறது என மதரீதியான அமைப்புகள் காதலர் தினத்தை கொண்டாட விடுவதில்லை.
இந்நிலையில் இலங்கையில் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டாடுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது எல்லாம் கலாச்சார ரீதியாக என்று நினைக்க வேண்டாம் கொரோனா தொற்று இலங்கையில் மீண்டும் லேசாக உருவெடுப்பதால் இதை தவிர்க்கவே இந்த நடவடிக்கையை அந்த நாட்டு அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.
