Connect with us

இலங்கைக்கு உதவி செய்ய நினைக்கிறோம்- ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவில்லை

Entertainment

இலங்கைக்கு உதவி செய்ய நினைக்கிறோம்- ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவில்லை

நமது அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார ரீதியிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.அனைத்து பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு பல நாடுகளும் உதவி செய்து வருகின்றன. இந்தியாவும் பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. டீசல், பெட்ரோல் பல்லாயிரக்கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கைக்கு தமிழ்நாடு அரசு 40000 டன் அரிசியை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் சில அடிப்படை பொருட்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசுதான் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சட்டசபையில் இன்று இது குறித்த தகவலை தமிழக அரசு அளித்துள்ளது. மத்திய அரசிடம் இது குறித்து கேட்டிருப்பதாகவும் அவர்கள்தான் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளார்.

பாருங்க:  2019 PF(Provident Fund)பிடித்தம்; சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு தெரியுமா?

More in Entertainment

To Top