Connect with us

இலங்கை பொருளாதார நெருக்கடி போராட்டம்- துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Latest News

இலங்கை பொருளாதார நெருக்கடி போராட்டம்- துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால், எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்தா ராஜபக்சேவும் பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் கொழும்பில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ள ராம்புக்கானா பகுதியில் நெடுஞ்சாலையை மறித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்ற போது வன்முறை ஏற்பட்டது.

போலீசார் மீது சிலர் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் ஒருவர் பலியாகி உள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தலைநகர் கொழும்பில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பாருங்க:  மது விருந்து நிகழ்ச்சியில் நடனமாடியவர் மயங்கி விழுந்து பலி

More in Latest News

To Top