Latest News
இலங்கையில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம்
இலங்கை தற்போது கடுமையான பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்திய அரசு இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து உதவி வருகிறது.
எரிபொருள், அரிசி என எந்த எந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதோ அனைத்தையும் இந்திய அரசு கொடுத்துள்ளது.
இந்நிலையில் பாரதிய ஜனதா தமிழக தலைவர் அண்ணாமலை இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இன்று முதல் இலங்கையில் 4ம் தேதி வரை இருக்கிறார்.
இலங்கை தமிழ் எம்.பி செந்தில் தொண்டைமான் அண்ணாமலையுடன் உடன் இருந்து வருகிறார். நேற்று நுவரேலியாவில் உள்ள சீதை அம்மன் கோவிலுக்கு சென்ற அண்ணாமலை அது குறித்து கூறியுள்ளதாவது.
இந்தியா மற்றும் இலங்கையின் வரலாறு மற்றும் நாகரீகம் ஒரே நேர்கோட்டில் பயணித்துள்ளது. கொழும்பிலிருந்து 182 கிமீ தொலைவில் உள்ள நுவேரா எலியா மாவட்டத்தில் உள்ள சீதா எலியாவில் உள்ள சீதை அம்மன் கோவில் இதை உறுதிப்படுத்தியது. இங்கு தான் சீதா மாதாவை ராவணன் சிறைபிடித்து அடைத்தார்