Latest News
கஷ்ட காலம் என்பது எப்போதுமே இருக்காது- இலங்கையில் அண்ணாமலை பேச்சு
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரத பிரதமர் மோடியின் தூதுவராக இலங்கை சென்றுள்ள பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அங்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
அங்கு நடந்த மே தின விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, கஷ்ட காலம் என்பது எப்போதும் இருக்காது. இந்த கஷ்ட சூழ்நிலை மாறும்.
இலங்கை மக்களின் கஷ்ட சூழ்நிலை மாற வேண்டும் என்றே பாரத பிரதமர் மோடி அவர்கள் பாடுபட்டு கொண்டிருக்கிறார். ராமர் பாலம் கட்ட உதவிய அணில் போல மோடிஜியின் சிஷ்யனாக நான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். உங்கள் வாழ்க்கை நிலை கஷ்ட சூழ்நிலைகள் மாறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Sri_Sri_yd/status/1520814382246100992?s=20&t=JdSh8sA7xQs5osih92YxBg
