39 கோடியில் வீடு வாங்கிய ஸ்ரீதேவி மகள்

59

தமிழ்ப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. பின்பு ஹிந்தி திரையுலகம் சென்று பிரபல தயாரிப்பாளரான போனிகபூரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் திடீரென மரணமடைந்து விட்டார் ஸ்ரீ தேவி. இவரது மகள் ஜான்வி கபூர் 2018-ம் ஆண்டு இஷான் கட்டார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.தற்போது கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஜான்விகபூர் மும்பையில் அமிதாப்பச்சனின் வீடு அருகே ரூ.39 கோடியில் வீடு வாங்கியுள்ளார். இந்த வீடு மும்பை ஜூகு பகுதியில் ஜூகுவைல் பார்லே குடியிருப்பு திட்டத்தில் அமைந்துள்ளது. இது மும்பையின் மிகவும் ஆடம்பரமான மற்றும் மேல்மட்ட குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த வீட்டை ஜான்வி கபூர் கடந்த டிசம்பர் 10-ந்தேதி பத்திரப்பதிவு செய்தார்.

பாருங்க:  விஷால் நடிக்கும் சக்ரா பாடல் வெளியீடு