Latest News
ஸ்ரீரங்கநாதர் வழிபாடும்- பணம் சேர ரகசியமும்
பல ஆண்டுகளாக இருந்து வரும் பண நெருக்கடியை தீர்க்கும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் தரிசனம்!!!
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மிகப் பெரும் செல்வந்தராக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
ஆனால் அதற்குரிய ஆன்மீக ரீதியான முயற்சிகளில் ஒரு சிலரே ஈடுபடுகிறார்கள்.
காரணம் நாத்திக பிரச்சாரத்தின் விளைவாக பலருக்கு தெய்வ நம்பிக்கையும் ஜோதிட நம்பிக்கையும் குறைந்து விட்டது அல்லது போய்விட்டது .
எந்த ஒரு தெய்வீக பரிகாரம் செய்வதாக இருந்தாலும் முதலில் நம்முடைய பாரம்பரிய குணமான சைவ உணவு பழக்கம் இருக்க வேண்டும்.( ஒருபோதும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது)
மது பழக்கம் நம்முடைய பண்பாட்டில் ஒருபோதும் கிடையாது. எனவே மது அருந்தக்கூடாது.
போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இன்று பரவலாகி கொண்டிருக்கிறது .
போதைப் பொருட்கள் எதையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
இந்த மூன்று சுய கட்டுப்பாடுகளையும் யார் பின்பற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் இங்கே சித்தர்களின் அருளால் தெரிவிக்கும் தெய்வீக பரிகாரம் பலன் தரும்!!! இல்லாவிட்டால் தராது.
ஒவ்வொரு மாதமும் ஒரு முறை உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் .
அந்த நட்சத்திரம் இருக்கும்பொழுது ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு வந்து அவரை மனப்பூர்வமாக தரிசனம் செய்ய வேண்டும் .
தரிசனம் செய்த பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் அவருடைய நினைவாக இருக்கவேண்டும் .
அதன்பிறகு வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும்.
இவ்வாறு ஒரு வருடம் உத்திரட்டாதி நட்சத்திரம் அன்று ஸ்ரீ ரங்கநாத பெருமாள் தரிசனம் செய்வதால் பல ஆண்டுகளாக இருந்து வந்த பண நெருக்கடி படிப்படியாக விலகி விலகி விடும் .
கொங்கண சித்தரின் அருளாசியால் இந்த தெய்வீக ரகசியத்தை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்.
