---Advertisement---

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சவடியில் 2000 லிட்டர் ஆஞ்சநேயருக்கு பாலாபிசேகம்

Published on: January 3, 2022
---Advertisement---

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி மஹோத்ஸவத்தையொட்டி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

புதுச்சேரி – திண்டிவனம் சாலை பஞ்சவடியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 36 அடி உயரம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில்  மஹா கணபதிக்கும், பட்டாபிஷேக கோலத்தில்  ராமருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்ட வெங்கடாசலபதிக்கு தனி சன்னதி எழுப்பப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி ஜன.1-ம் தேதி இக்கோயிலில் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று ஹனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை ராமர் சன்னதியில் விஸ்வரூப தரிசனம் மற்றும் கோபூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தனுர்மாத பூஜையும், யாகசாலையில் யஜமான மகாசங்கல்பத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காலை 8.30 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதியில் ராம சொர்ண பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் 36 அடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், இளநீர், பன்னீர் மற்றும் மங்கள வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலையில் பூர்ணாஹூதி முடிந்தவுடன் கடம் புறப்பட்டு கோயிலை வளம் வந்து சன்னதி வந்தடைந்தது. தொடர்ந்து சாமிக்கு புரோஷணம் நடந்தது. 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,008 வடைகள் கொண்ட பூரண வடமாலைகள் சாற்றப்பட்டது. சிறப்பு அலங்காரம் முடிந்து மகா தீபாராதனை செய்து வேதகோஷங்கள் முழங்க விசேஷ திருவாராதனம் நடந்தது. மாலையில் ராமர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

 

 

পড়তে ভুলবেন না

ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் பிறந்தநாள் புகைப்படம்

நடிகர் ரவி மோகன் உடனான உறவு: கெனிஷா பிரான்சிஸின் வைரல் பிறந்தநாள் பதிவு மற்றும் உருக்கமான விளக்கம்!

டாக்டர் ஸ்ரீலீலா தனது எம்பிபிஎஸ் பட்டத்துடன் இருக்கும் புகைப்படம்

டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

மும்பை மெலடி ரோடு மற்றும் ஜெய் ஹோ இசைத் திட்டம்

மும்பை கடற்கரைச் சாலையில் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’: வாகனங்கள் செல்லும்போது ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பாடல்!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

கட்டிப்பிடித்தல் தினம் 2026 மற்றும் அதன் நன்மைகள்

பிப்ரவரி 12 சர்வதேச கட்டிப்பிடித்தல் தினம் (Hug Day): ஆரோக்கியம் மற்றும் உளவியல் நன்மைகள் குறித்த தொகுப்பு!