சுந்தரபாண்டியன் படம் மூலம் தனது வெற்றிக்கொடியை அழுத்தமாக பதித்த இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகருக்கு அடுத்து வந்த கதிர்வேலன் காதல் படம் சறுக்கியது. தொடர் விடா முயற்சியாக தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தை தனது முதல் பட நாயகன் சசிக்குமாரை வைத்து இயக்கி வருகிறார்.
நீண்ட காலமாக தயாராகி வரும் இப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் நாயகியாக தான்யா ரவிசந்திரன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியாவார். ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று அக்டோபர் 9 சென்னையில் தொடங்கியது.
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என அனைத்துமே எஸ்.ஆர்.பிரபாகரன் தான். இதில் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ்ட் வெங்கட், ராம்நாத் ஷெட்டி, சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர்.





