அமெரிக்காவில் ஆபரேசனின்போது நோயாளிகளின் உடல் உறுப்புகளை எடுத்து வைத்துக்கொண்டு இதன் விலை என்ன என கணியுங்கள் என கேட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை பாய உள்ளது.
ஆபரேஷன் தியேட்டரில் ஆபரேஷன் செய்பவரின் உடல் பாகங்களை காட்டி சரியான விலை கேட்கும் ‘கேம் ஷோ’ நடத்தினால் எவ்வளவு பயங்கரமாக இருக்கும்? அப்படிப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஸ்பெக்ட்ரம் ஹெல்த் மருத்துவமனை டாக்டர்கள் ஆபரேஷனுக்கு நடுவே மனித உடல் உறுப்புகளை காட்டி நடத்திய இந்த கேம் ஷோவை வுட்-டிவி சேனல் அம்பலமாக்கி உள்ளது.
இது பார்வையாளர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மருத்துவமனையின் குறிப்பிட்ட டாக்டர்கள் இன்ஸ்டாகிராமில் தாங்கள் ஆபரேசன் செய்தபோது எடுத்த புகைப்படங்களை வைத்து இது என்ன விலை இது என்ன விலை என கேம் ஷோ நடத்தியுள்ளார்கள் இதனால் இந்த டாக்டர்கள் மீது சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது.