Pallikalvi News
சனி, ஞாயிறுகளில் பள்ளி இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு!
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் இனிவரும் சனி, ஞாயிறு கிழமைகளில் பள்ளி இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினார். இதனால், அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் எடுக்காததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்க இருப்பதாலும், அடுத்த வாரம் செய்முறை தேர்வுகள் இருப்பதாலும், முதல்வரின் கோரிக்கையை ஏற்று தங்களின் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், அரசு ஆசிரியர்களின் போராட்டத்தால் இயங்காமல் போன 9 நாட்களை ஈடுகட்ட சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சிறப்பு வகுப்பு எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.