நேற்று மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தமிழக அரசு உத்தரவுப்படி 72 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அவரது இறுதி அஞ்சலியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வந்திருந்து மரியாதை செலுத்தினார்.