எஸ்.பி.பிக்காக தெலுங்கு ரசிகர்கள் செய்த காரியம்

63

பிரபல தமிழ் உள்ளிட்ட தென் பிராந்திய மொழி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். இவர் தமிழில் வந்த சாந்தி நிலையம் படத்தின் இயற்கை என்னும் இளைய கன்னி பாடலின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

எண்ணற்ற சினிமா பாடல்களை தமிழில் பாடிய எஸ்.பி.பி கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி இயற்கை எய்தினார். அவரின் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் கடந்த ஜூன் 21 அன்று உலக இசை தினத்தை முன்னிட்டு எஸ்.பி.பிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தெலுங்கு இசைக்கலைஞர்கள் ‘பாலு சுரகானிகி ஸ்வரர்ச்சனா’ என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் எஸ்.பி.பி. சரண், எஸ்.பி.சைலஜா, மனோ, ஆர்.பி.பட்நாயக், ரேவந்த், ஸ்ரீ ராமசந்திரா, இசையமைப்பாளர் மணிஷர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டு எஸ்பிபி குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டு அவரது பாடல்களையும் பாடினர்.

இந்நிகழ்ச்சி குறித்து எஸ்பிபியின் சகோதரியும், பாடகியுமான எஸ்.பி.சைலஜா கூறும்போது, ‘இந்த அழகிய நிகழ்வில் நானும் ஒரு அங்கமாக இருந்தது அவருடைய தங்கையாக மட்டுமின்றி அவரிடமிருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்ட ஒரு மாணவியாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

பாருங்க:  இணையத்தில் பரவும் வதந்தி- ப்ளீஸ் எங்களை காயப்படுத்த வேண்டாம்- எஸ்.பி.பி சரண்
Previous articleஓடிடியில் வெளியாகும் நாரப்பா
Next articleமுத்தரசனை நலம் விசாரித்த உதய்