cinema news
தன் சிலையை முன்பே செய்ய சொன்னதன்மூலம் மரணத்தை முன்பே கணித்தாரா எஸ்.பி.பி
பொதுவாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டில் சிறியவர்களிடம் சொல்லி வேதனைப்படுத்த மாட்டார்கள். நோய்கள் அபாயக்கட்டத்திற்க்கு செல்லும்போதுதான் குடும்பத்தினராக பார்த்து மருத்துவமனையில் சேர்ப்பார்கள். சிலருக்கு உடலில் ஏற்படும் குழப்பமான பிரச்சினைகளால் தான் நீண்ட நாள் இருக்கமாட்டோம் என முடிவுக்கு வந்து விடுவார்கள்.
அப்படியாக எஸ்.பி.பி நினைத்தாரோ என்னவோ அவர் சிலையை 6 மாதங்களுக்கு முன்பே ஆந்திராவில் உள்ள ஒரு சிற்பியிடம் கொடுத்து வடிக்க சொல்லி இருக்கிறார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், கொத்தபேட்டை என்ற ஊரில் உள்ள சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம், மறைந்த தனது தந்தை சாமமூர்த்தி- தாய் சகுந்தலா ஆகியோரின் சிலைகளை செய்வதற்கு எஸ்.பி.பி ஒருஆர்டர் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் உடையார் ராஜ்குமாரை தொடர்பு கொண்ட எஸ்.பி.பி தனது சிலை ஒன்றை செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார்.
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சிலை செய்வதற்கு நேரில் வந்து ஆர்டர் தர முடியாது என்று கூறியதுடன், தேவையான போட்டோ ஷூட் செய்ய முடியாது என கூறி தனது புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்துள்ளார்.
சிற்பி ராஜ்குமார் சிலையை செய்து கொண்டிருந்த அந்த நேரத்தில் எஸ்.பி.பி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து எஸ்.பி.பி திரும்பிய உடன் சிலையை ஒப்படைக்க வேண்டும் என சிற்பி இருந்துள்ளார். ஆனால்,அதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது இதனால் உறவினர்களும், ரசிகர்களும் தன் மரணத்தை முன்பே எஸ்.பி.பி உணர்ந்துவிட்டாரோஎன கூறி வருகின்றனர்.