புதுச்சேரி அருகே 6 டன் எடை கொண்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் முகம் வடிவமைக்கப்பட்டு அவரின் நினைவு இல்லத்தில் வைக்கப்பட உள்ளது.
பிரபல பாடகர் எஸ்.பி.பி., கடந்த 2020ல் தன் 74வது வயதில் காலமானார், அவரின் உடல் காஞ்சிபுரத்தில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரிலுள்ள எஸ்.பி.பி.,யின் பண்ணை வீட்டில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இங்கே உருவாக்கப்பட்டு வரும் நினைவு இல்லத்தில் அமையும் சிலைகள் புதுச்சேரி அருகே ஆரோவில் சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள சிற்பக் கூடத்தில் உருவாகியுள்ளன. அந்த வகையில் பாறையைக் குடைந்து 6 டன் எடை அளவில் எஸ்.பி.பி., யின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் எஸ்.பி.பி., யின் கையெழுத்து, அவர் உச்சரிக்கும் மந்திரம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. இதற்கான பணிகளில் சிற்பி கருணாகரன் குமார் தலைமையில் ஆறு சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர். பணிகள் முடிவடைந்ததும் கிரேன் மூலம் வாகனத்தில் ஏற்றி எஸ்.பி.பி., யின் நினைவு இல்லத்திற்கு சிலை கொண்டு செல்லப்பட உள்ளது.
நினைவு இல்லத்தில், பிரபல பாடகர் எஸ்.பி.பி., யின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு பொருட்களை வைக்க திட்டமிட்டு இருந்தாலும், இந்த 6 டன் எடை கொண்ட எஸ்பி.பி., யின் முகம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.