cinema news
எஸ்.பி.பிக்கு மோட்ச தீபம் ஏற்றி பாடகர்கள் வழிபாடு
பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அண்ணாமலையாரை புகழ்ந்து பாடிய ஹர ஹர சிவனே பாடலை நடிகர் மயில்சாமியின் முயற்சியால் திருவண்ணாமலை கோவிலிலேயே பாட வைத்த நிகழ்ச்சி திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று சில வருடங்கள் நடந்தது.
ஒரு முறை கடும் நெருக்கடி மற்றும் கூட்டம் இருந்ததால் எஸ்.பி பாலசுப்ரமணியத்தை நடிகர் மயில்சாமி வேண்டுதலின் மாவட்ட கலெக்டர் கந்தசாமி அவரின் காரில் அழைத்து சென்று கோவிலுக்குள் உள்ளே பாதுகாப்பாக அழைத்து சென்றார்.
இனி அப்படி ஒரு சம்பவம் நடக்கபோவதில்லை. இந்நிலையில் கடந்த 25ம் தேதி இயற்கை எய்திய பாடகர் எஸ்.பி.பிக்கு அவரது ஆத்மா சாந்திக்காக நேற்று மோட்ச தீபம் ஏற்றும் வைபவம் அண்ணாமலையார் கோவிலில் நடந்தது.
இதில் பாடகர் மனோ, நடிகர் மயில்சாமி, மாவட்ட கலெக்டர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.