பிரபல பாடகர் மனோ எண்பதுகளில் வெளிவந்த பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற அண்ணே அண்ணே பாடலின் மூலம் அறிமுகமானார். தேன்மொழி எந்தன் தேன்மொழி பாடல் மற்றும் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற மதுரை மரிக்கொழுந்து வாசம் பாடலை பாடியதன் மூலம் பிரபலமடைந்தார்.
இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் நேற்று மறைந்த பாடகர் எஸ்.பி.பியுடன் இணைந்து அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க பாடல் ஜல்லிக்கட்டு படத்தில் இடம்பெற்ற ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று என்ற பாடலை குறிப்பிட்டு சொல்லலாம். இது போல எத்தனையோ பாடலை இணைந்து பாடிய மனோவுக்கு எஸ்.பி.பியின் மரணம் கடும் வேதனையை தந்துள்ளது உண்மை.
அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பாடகர் மனோ அழுதது ரசிகர்கள் கண்ணில் கண்ணீரை வரவைத்தது.
எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பாடகர் மனோ கண்ணீர் விட்டு கதறி அழுதார்..!#SPBalasubrahmanyam #SPB #RIPSPBalaSubramanyam #RIPSPB pic.twitter.com/riTweBc65F
— Dinakaran (@DinakaranNews) September 26, 2020