எஸ்.பிபியின் இறுதி சடங்குகள் தொடங்கியது

எஸ்.பிபியின் இறுதி சடங்குகள் தொடங்கியது

சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி பாடலின் மூலம் அறிமுகமானவர் பாடகர் எஸ்.பி.பி. அதற்கு முன்னரே அவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்துவிட்டது. அதன் பின் எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான் என பல இசையமைப்பாளர்களின் இசையில் பல்வேறு பாடல்களை பாடிவிட்டார். இந்தியமொழிகள் அனைத்திலும் மொத்தம் 40000க்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.பி.பி பாடிவிட்டார்.

கடந்த ஆகஸ்டில் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பிக்கு கொரோனா சரியாகி விட்டாலும். நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினைகள் சரியாகவில்லை. இதனால் சிறிது சிறிதாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

இன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அவரது பண்ணை வீட்டில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கேயே அவரது உடலும் அடக்கம் செய்யப்பட உள்ளது. சற்றுமுன் இறுதிசடங்குக்கான அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டு வருகிறது.