cinema news
இன்று எஸ்.பி.பியின் பிறந்த நாள்
தமிழில் எத்தனையோ நல்ல பாடல்களை பாடி ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர் பாடகர் திரு எஸ்.பி பாலசுப்ரமணியன். சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை எனும் இளைய கன்னி பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எஸ்.பி.பி கெத்தா நடந்து வரான் கேட்டையெல்லாம் கடந்து வரான் வரை எத்தனையோ ஆயிரம் தித்திக்கும் பாடல்களையும் அதிரடி பாடல்களையும் பாடி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.
எஸ்.பிபியின் பிடித்த 10 பாடல்களை சொல்லுங்கள் என்று யாராவது சொன்னால் கூட கஷ்டமான விசயம் அது அட் த டைம்ல பத்தாயிரம் பாட்டாவது மனசுல அந்த 10 பாடல் எழுதுவதை எழுத விடாமல் குழப்பி விட்டு விடும்.
இளையராஜா நெருங்கிய நண்பராதலால் எஸ்.பிபியின் பாடல்கள் என்றால் இளையராஜாவும் இளையராஜா என நினைத்தால் எஸ்.பிபியும் ஞாபத்துக்கு வருவர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எஸ்.பி.பி அவர்கள் காலமானார். அவர் இறந்த பிறகு முதல் பிறந்த நாள் என்பதால் எஸ்.பி.பியின் ரசிகர்கள் சோகமாக இந்த பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.