மோகனின் மைக் பாடல்களை அதிகம் பாடியவர் எஸ்.பிபி

மோகனின் மைக் பாடல்களை அதிகம் பாடியவர் எஸ்.பிபி

80களில் புகழ்பெற்ற நடிகர் மோகன், இவருக்கென்று தனி செல்வாக்கு திரையுலகில் இருந்தது. மிகச்சிறந்த நடிகரான இவர் நடிக்கும் படங்களில் பாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இசைப்போட்டி, இசை நிகழ்ச்சி என இவரின் படங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இவர் நடித்த படங்கள் எல்லாம் பாடல்களுக்காகவே ஹிட் அப்படிப்பட்ட பெரும்பான்மை பாடல்களை பாடி இருந்தவர் நேற்று மறைந்த எஸ்.பி.பி அவர்கள்.

அப்படிப்பட்ட காட்சிகளுக்கு மோகன் காட்சிக்கேற்ப வாயையும் தலையையும் அசைக்க பின்னணி பாடிய எஸ்.பி.பியின் குரலே ஓங்கி ஒலித்தது.

எஸ்.பி.பியை தவிர்த்து வேறு யாரையும் மோகன் பாடும் மேடை  பாடலின்  பின்னணி குரலுக்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

சங்கீத மேகம், உதயகீதம் பாடுவேன்  உயிர்களை நான் தொழுவேன், வா வெளியே இளம்பூங்கொடியே, என்னோடு பாட்டு பாடுங்கள், கூட்டத்திலே கோயில் புறா, யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ என ஏராளமான மோகனின் மேடை பாடல்களுக்கு இளையராஜாவின் இசையில் வந்த அந்த பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் எஸ்.பி.பி.

எஸ்.பி.பிக்கு செலுத்தப்படும் அஞ்சலியில் மோகன் நடித்த உதயகீதம் படத்தில் இடம்பெற்ற, இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்ற வார்த்தைகள் கொண்ட வரிகள்தான் அதிகம் பயன்படுத்தபடுவது குறிப்பிடத்தக்கது.